தமிழ் மொழியின் பொக்கிஷம்-பாரதியின் படைப்புகள்: வளர்ந்த இந்தியா இலக்கை எட்டி பாரதியின் கனவை நனவாக்குவோம்-பிரதமர் மோடி
மகாகவி பாரதியாரின் 143 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் மகாகவி பாரதியாரின் இலக்கிய படைப்புகள் தமிழ் மொழியின் பொக்கிஷம் என்று பிரதம நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார் அதாவது நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் பாரதி அறிஞர் சீனி.விஸ்வநாதன் தொகுத்த பாரதி படைப்புகள் நூலை பிரதம நரேந்திர மோடி வெளியிட்ட பிறகு பேசும் பொழுது வளமான இந்தியாவுக்கான பாரதியாரின் தொலைநோக்கு பார்வையின் அவரது சிந்தனைகளும் மதிநுட்பமும் இன்றளவு நமக்கு உத்வேகத்தை கொடுக்கிறது
பாரதியாரைப் போன்ற ஆளுமைகள் நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தோன்றுவர் பாரதியார் பாரத அன்னைக்கு சேவை இந்தியாவின் எழுச்சி மற்றும் பெருமை குறித்து கனவு கண்டவர் பாரதியாரின் சிந்தனைகள் மூலம் இந்தியாவின் கண்ணோட்டம் உலகம் முழுவதும் முன்வைக்கப்பட்டு வருகிறது 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும் நம் தேசத்தில் அளிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார் மேலும் என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்று முடியும் எங்கள் அடிமையின் மோகம் என்ற வரிகள் மூலம் நம் ஒவ்வொருவரும் மனதிலும் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பியவர்
இதைத் தவிர இந்தியா என்ற இதழைத் தொடங்கி பத்திரிக்கை துறையில் புதிய அரசியல் கார்ட்டூன் கலை வெளியிட்டு புரட்சி செய்தவர் அவரின் இலக்கியங்களை பரப்பும்போது நாமும் தமிழ் மொழிக்கு சேவை செய்கிறோம் அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழின் பெருமையை பறைசாற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம் ஐநா சபையில் தமிழில் பெருமையை பிரதிநிதிப்படுத்தும் பெருமையும் எனக்கு கிடைத்தது மேலும் வளர்ந்த இந்தியா என்ற இலக்கு எட்டுவதன் மூலம் பாரதியின் கனவை நனவாக்குவோம் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி