மேற்குவங்க இடை தேர்தலில் நான் தான் ஆட்டநாயகி- பாஜக வேட்பாளர் பிரியங்கா பெருமிதம் !
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தாலும் அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அவர் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியை தவிழுவினார். எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்பதால் அவர் தனது சொந்த தொகுதியான பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அதனால் அந்த தொகுதியின் திரிணாமூல் எம்.எல்.ஏ ராஜினாமா செய்திருந்தார்.
இதனை அடுத்து பாவனிபூர் இடைதேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா போட்டியிட்டார்.இதில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரியங்கா, முதல்வரை எதிர்த்து அதுவும் அவருக்கு சாதகமான தொகுதியில் கணிசமான வாக்குகள் பெற்றிருள்ளேன். இதே போல தொடர்ந்து கடுமையாக உழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நடைபெற்ற இந்த இடைதேர்தலில் நான் தான் ஆட்ட நாயகி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.