உக்ரைனில் இந்திய தேசிய கொடிக்கு மரியாதை: நாடு திரும்பிய மாணவர்கள் நெகிழ்ச்சி!

Update: 2022-03-07 11:09 GMT

உக்ரைனில் இந்திய தேசியக்கொடிக்கு மிகப்பெரிய மரியாதை கொடுக்கின்றனர் எனவும், பிரதமர் மோடியின் முயற்சியால் நாடு திரும்பி வருகின்றோம் என்று மாணவர்கள் கூறியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 12வது நாளாக போர் நடத்தி வருகிறது. வான்வெளி மற்றும் தரை, கடல் என மூன்று வழிகளிலும் போராட்டம் நடத்தப்படுவதால் உக்ரைன் ராணுவம் விழிபிதுங்கி நிற்கிறது. அதே சமயம் இந்திய மக்கள் அனைவரையும் மத்திய அரசு பத்திரமாக மீட்டு வருகிறது.

இதுவரைக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதே போன்று உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் கூறும்போது, இந்திய தூதரக உதவியால் பாதுகாப்புடன் வெளியேறுவதற்கு அனுமதிக்கபட்டோம். நாங்கள் வசித்த பகுதியில் இருந்து 500 பேர் பேருந்தில் உக்ரைனில இருந்து அண்டை நாடான ஹங்கேரிக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டோம். அங்கு தயாராக இருந்த விமானங்களில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டோம்.

மேலும், உக்ரைனில் நமது நாட்டு தேசியக்கொடியை காண்பித்தாலேயே மிகப்பெரிய மரியாதை கொடுக்கின்றனர். தேவையான உதவிகளையும் செய்தனர். பிரதமர் மோடியின் பெரும் முயற்சியாலேயே தாயகம் திரும்பியிருக்கிறோம் என்று மாணவர்கள் கூறினர்.

Source: Dinamalar

Image Courtesy: Business Today

Tags:    

Similar News