"அஃப்ரிடி என்னை இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்தினார்" - முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா பகீர்!

Update: 2022-05-04 12:50 GMT

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் சுழற்பந்துவீச்சாளரான டேனிஷ் கனேரியா, சமீபத்தில் செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.


இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியை   பூர்விகமாக கொண்ட   டேனிஷ் கனேரியாவிற்கு 41 வயதாகும். ஆகையால் இவர் பிறப்பிலிருந்தே ஒரு இந்து ஆவார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இவரது பெற்றோர்கள், பாகிஸ்தானிலுள்ள கராட்ச்சிக்கு புலம்பெயர்ந்ததால், இந்திய  நாட்டிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவான பொழுது,டேனிஷ் கனேரியாவின் பெற்றோர்கள் பாகிஸ்தானிலேயே இருக்க நேரிட்டது.


டேனிஷ் கனேரியாவின் கடின உழைப்பால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். இவர் 2000 முதல் 2010 வரை பாகிஸ்தான் அணிக்காக லெக் ஸ்பின்னராக விளையாடியுள்ளார்.


இவர் சமீபத்தில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தன் கிரிக்கெட் வாழ்வு குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது : நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்தபோது, கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி, என்னை இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற வற்புறுத்தினார். மேலும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் "இஜாஸ் பட்" என் கடினமான காலங்களில் எனக்கு எதிராக செயல்பட்டார். எனக்கு ஆதரவாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஷொயப் அக்தரும் பல விளைவுகளை சந்தித்தார்.


இவரது கருத்து கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Zee News

 

Similar News