இந்து மருத்துவரை கொடூரமாக தாக்கிய இஸ்லாமிய கும்பல்: அல்லாஹ்வின் மீது சத்தியம் என்றும் கொலை வெறி தாக்குதல்!
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தில் உள்ள கோரபாரி பகுதியில் இந்து மருத்துவர் டாக்டர் தௌலத் ராம் கொடூரமாக தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் உரிமை ஆர்வலர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நீல நிற பைஜாமா-குர்தா அணிந்த ஒரு நபர், மருத்துவரை அறைந்து தாக்குவதை வீடியோ காட்டுகிறது. தன்னை விடுவிக்குமாறு மருத்துவர் கெஞ்சுகிறார்.
ஒரு கட்டத்தில் மருத்துவர் "அல்லாஹ் கசம் (அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன்)" என்று கெஞ்சுகிறார். ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து தாக்குகிறார். பாகிஸ்தானில் இந்து மருத்துவர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் சாதாரணமாக நடக்கிறது.
2016 ஆம் ஆண்டில், டாக்டர் பிரீதம் தாஸ் லக்வானி கராச்சி, சிந்துவில் அமைந்துள்ள 'பிஸ்மில்லா கிளினிக்' என்ற தனது கிளினிக்கில் நோயாளிகளைப் பார்க்கும்போது கொலை செய்யப்பட்டார். டாக்டர் லக்வானியின் கொலைக்குப் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பம் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து குஜராத்தில் குடியேறியது.
2011 ஆம் ஆண்டு, ஈத்-உல்-ஆதா அன்று சிந்து மாகாணத்தில் உள்ள சாக் நகரில் அசோக் குமார், நரேஷ் குமார் மற்றும் அஜீத் குமார் ஆகிய 3 பாகிஸ்தானிய இந்து மருத்துவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். செல்வாக்கு மிக்க உள்ளூர் முஸ்லிமுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கட்டணம் கேட்டதால் கொல்லப்பட்டனர்.