தமிழ்நாடு பெண்களை குறி வைக்கும் தீவிரவாத அமைப்பு!! இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!!
ஜெய்ஷ்-இ-முகமது பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பானது பெண்கள் படை பிரிவை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பெண்கள் படைக்கு ஜமாத் அல்-முஃமினாத் என்கின்ற நம்பிக்கைப் பெண்கள் சமூகம் என்ற பொருளுடைய பெயரில் அழைக்கப்படுகிறது. பெண்கள் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு அமைப்பு பாகிஸ்தானில் இருக்கும் பஹவல்பூர் உள்ள மார்கழ் உஸ்மான்-ஓ-அலி மையத்தில் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது.
ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு அழிக்கப்பட்டதை தொடர்ந்து பேரிழப்பு ஏற்பட்டதால் இதுபோன்று நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திரட்டப்படும் பெண்களை உளவு பார்க்கவும், நிதி திரட்டவும், உளவியல் போருக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கியமாக ஜம்மு காஷ்மீர், உத்திர பிரதேசம், தமிழ்நாடு போன்ற இடங்களில் இருக்கும் இஸ்லாமிய பெண்களை குறி வைத்து சமூக ஊடகங்கள் மற்றும் மதரஸாக்கள் மூலமாக ஆட்சேர்ப்பு முயற்சி நடைபெற உள்ளது.
ஆன்லைன் நெட்வொர்க்கள் மூலம் பெண்களை சேர்த்து இறைப்பணி பிரச்சாரம் நடத்தி படித்த, நகர்ப்புற முஸ்லிம் பெண்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெண்களை மூளைச்சலவை செய்து தகவல் கொடுப்பது, நிதி திரட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட வைப்பர். மேலும் அந்தப் பெண்களுக்கு எதிர்காலத்தில் குண்டு வெடிப்பு போன்றவற்றிற்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
ஏற்கனவே ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பானது ஐநா மற்றும் பல நாடுகளால் தீவிரவாத அமைப்பு என்று பெயர் பெற்றுள்ள நிலையில் தற்பொழுது புதிதாக பெண்கள் படை திரட்டி வருகிறது. இது இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை விரிவு படுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சி என்றும், உளவியல் போர் மற்றும் அடிப்படை ஆட்சேர்ப்புக்கு பயன்படுத்தும் என்று உளவியல் துறை ஆதாரங்கள் கூறுகின்றது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.