இதை செய்தால் உங்களுக்கு நரகம் தான்!! உத்திரபிரதேச முதல்வர் பேச்சு!!
உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு சிலிண்டர் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், உத்திரபிரதேசத்தில் இருக்கும் பெண்களை ஈவ்டீசிங் மற்றும் துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யுவராஜாவே நேரடியாக சந்திக்க நேரிடும் என்று கூறினார்.
இது இரட்டை இன்ஜின் அரசு என்பதால் பெண்களை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களை எமராஜா சந்திப்பதற்கு காத்துக் கொண்டிருப்பதாகவும், நரகத்திற்கு செல்ல நினைப்பவர்கள் இது போன்ற செயல்களை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பண்டிகை நாட்களில் கொண்டாட்டங்களை சீர்குலைப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், ஒருபோதும் அரசாங்கம் இது போன்ற நபர்களை சிறையில் அடைப்பதற்கு தயங்காது என்று தெரிவித்துள்ளார். கடந்த முறை ஆட்சியில் இருந்த அரசை போல கிரிமினல்களுக்கு ஒரு போதும் இந்த அரசு தலைவணங்காது என்றும், உடனடியாக பதிலடி வழங்கும் என்றும் கூறினார்.
ஒவ்வொரு குடும்பமும் கட்டாயமாக ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் அப்போதுதான் அவர்களின் வீட்டில் தெய்வம் வசிக்கும் என்றும் உதவி செய்வது தான் தீபாவளியின் உண்மையான உணர்வு என்று தெரிவித்துள்ளார்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த அரசு தன்னுடைய குடும்பத்திற்காக மட்டுமே பாடுபட்டு வந்ததாகவும், வேலை வாய்ப்புகள் விற்பனை செய்யப்பட்டு, நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் மாநிலத்தைப் பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் இருந்து வந்தது. மக்கள் அடிப்படை தேவையான சிலிண்டருக்கு கூட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் 11 கோடி குடும்பங்கள் இலவச சிலிண்டர் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.