பள்ளிவாசலில் வைத்து பாலியல் வன்கொடுமை!! நரிக்குடியில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை!!
விருதுநகரின் திருச்சுழி பகுதிக்கு அருகில் இருக்கும் வீரசோழன் இடத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் நரிக்குடியில் இருக்கும் ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத்தாக பணியாற்றி வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் அவரிடம் மந்திரிக்க சென்றுள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு அப்துல் அஜீஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அஜீஸ் வைத்திருந்த சிறிய கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்து கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இந்நிலையில் பள்ளிவாசலில் இருந்து வழி தாங்க முடியாமல் வெளியில் வந்த பெண் கத்தி கூச்சலிட்டு அருகில் இருந்த நபர்கள் வந்து அப்துல் அஜீசை பிடித்து நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு காயம் அடைந்த அந்த பெண்ணை திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் அப்துல் அஜிஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.