பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறிய காவலர் பணியிடை நீக்கம்!!

Update: 2026-03-08 07:45 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (28) சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வருகிறார்.


இவர் நேற்று முன்தினம் மாலை போலீஸ் சீருடையில் ராயப்பேட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்தும்படியாக நுழைந்துள்ளார். பின்னர் அங்கு தனியாக இருந்த 32 வயதுடைய பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.


இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தப்பட்டது. இதில் காவலர் சூர்யா அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை காவல் ஆணையர் அருண் பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Tags:    

Similar News