அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி!! திமுக பிரமுகர்கள் மீது வழக்கு!!

Update: 2026-03-20 14:06 GMT

 ரூ.10 லட்சம் வாங்கி சுந்தரமூர்த்திக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த திமுக பிரமுகர்கள் நசீர் அகமத் மற்றும் பஷீர் அகமத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தரமூர்த்தி பொறியியல் படிப்பு முடித்து வேலை தேடி வரும் நிலையில், அவரது தந்தை ராஜேந்திரனுக்கு தெரிந்த நபர் மூலம் சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த திமுக பிரமுகரான நசீர் அகமத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.


நசீர் அகமத், ராஜேந்திரனிடம் தனது சகோதரர் பஷீர் அகமத் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும் அவருக்கு கட்சியில் மிகுந்த செல்வாக்கு இருப்பதால் உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் எனக் கூறி பெற்றுள்ளார். 


பணம் வாங்கிய பிறகு நசீர் மற்றும் பஷீர் இருவரும் கூறியதுபோல் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுந்தரமூர்த்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் திமுக பிரமுகர் பஷீர் அகமத் மற்றும் அவரது சகோதரர் நசீர் அகமத் இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News