தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சமூக வலைத்தளமான டுவிட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தமிழில் பதிவு செய்துள்ளார்.
சித்திரை 1 தமிழ் புத்தாண்டாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய தமிழ் புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியாகவும், மன நிம்மதியுடனும் வருடம் முழுவதும் இருக்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தமிழில் பதிவு செய்துள்ளார். "உலகெங்கிலும் வாழும் எங்கள் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த புத்தாண்டு நம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழர் பண்டிகைகளுக்கு தமிழில் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்ட அமித்ஷா தற்போது தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தமிழில் பதிவு செய்துள்ளதை தமிழர்கள் வைரல் செய்து வருகின்றனர்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்து பதிவினை தமிழில் பதிவு செய்துள்ளார். இதேபோல் அமெரிக்க அதிபரும் தனது வாழ்த்துச் செய்தியை தமிழில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.