ஆதித்யா எல் 1 புதிய கண்டுபிடிப்பு - இஸ்ரோ அறிவிப்பு!

Update: 2024-02-23 14:10 GMT

கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள எல் 1 என்கிற லெக்ராஞ்சியன் புள்ளியில் இஸ்ரோவின் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் இது ஆதித்யா எல் 1 என்று அழைக்கப்படுகிறது. 

இந்த விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றும், விண்வெளியில் உள்ள துகள்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றை குறித்தும் சூரியனில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆதித்யா எல் 1 சூரியகாற்றில் எலக்ட்ரான்களின் நிலையை கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 

அதாவது பிப்ரவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள பாப்பா என்னும் கருவி எலக்ட்ரான் நிலையை கண்டறிந்துள்ளதாகவும் சூரியக் காற்றின் எலக்ட்ரான் மற்றும் அயனிகளை தொடர்ந்து ஆதித்யா எல் 1 விண்கலம் கண்காணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் விண்வெளியின் வானிலை நிலைகளை கண்காணிப்பதில் பாப்பா கருவி சிறப்பான செயல்பாடுகளை வெளிக்காட்டி வருவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது. 

Source : Dinamalar 

Similar News