மாறும் 117 ஆண்டுகால சட்டம்:சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய புதிய வரைவு மசோதாவை உருவாக்கிய மத்திய அரசு!
இன்றைய இணையதள வாழ்க்கையில் அனைத்துமே ஆன்லைன் வழியாக செய்து முடிக்கும் வசதிகள் உள்ளது மக்களும் வீட்டிலிருந்தபடியே இணை வசதியை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்குவது முதல் கல்லூரியில் விண்ணப்பம் போடுவது வரை என அனைத்தையும் செய்து முடிக்கின்றனர் அந்த வகையில் சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறையையும் தற்போது மத்திய அரசு கையில் எடுத்துள்ளது
பல மாநிலங்கள் சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்திருந்தது அதற்காக சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வரைவு மசோதாவை ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் வரும் நில வளங்கள் துறை வெளியிட்டுள்ளது அதனால் இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
ஆகவே சொத்துக்களை பதிவு செய்தல் விற்பனை ஒப்பந்தம் சொத்துக்களை விற்பதற்கான அதிகாரம் வழங்குதல் விற்பனை சான்றிதழ் மற்றும் அடமானம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது இந்த வரைவு மசோதா சட்டமாக்கப்பட்டால் 117 ஆண்டு கால பத்திரப்பதிவு சட்டத்தை இது மாற்றும் திறன் கொண்டது