அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 13 நோயாளிகள் மரணம் - ஆட்சியர் நேரில் ஆய்வு!

Update: 2021-05-05 09:01 GMT

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 13 நோயாளிகள் உயிரிழந்ததை தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருக்கலாம் என்று நோயாளிகள் சந்தேகம் அடைந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், காட்டாங்குளத்தூர் ஆகிய பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பல்வேறு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 பேர் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்றும் இதனால் தான் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியது. இதனால் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று உறுதிப்படுத்தினார். மேலும் இறந்த 13 பேரில் ஒருவர் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் மற்றவர்கள் வயது மூப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக உயிரிலிருந்து உள்ளார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் 13 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News