பொறியல் படிப்பில் சேர முடியாத நான் இன்று 13 கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன்:நிதின் கட்கரியின் வெளிப்படையான பேச்சு!
பாஜக மூத்த தலைவரும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட கொள்கைகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
அதாவது கட்சியின் அடிமட்ட தொண்டன் நான் எனக்கு அரசியல் என்பது சமூக பொருளாதார சீர்திருத்தத்திற்கான கருவி மட்டுமே 90% சமூக பணியையும் 10% அரசியல் பணியை மட்டுமே நான் செய்து வருகிறேன் 12ஆம் வகுப்பில் 52% மதிப்பெண்களை மட்டுமே பெற்று பொறியியல் படிப்பில் சேர தகுதி பெறாத மாணவன்
ஆனால் தற்பொழுது 13 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றிருக்கிறேன் இருந்தாலும் இந்த வெற்றிக்கு எனது தாயே காரணம் என் அரசியல் வழிகாட்டி ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தால் அவர்களுக்கு உதவ முயற்சிப்பேன் ஏனென்றால் அமைச்சர்கள் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல இந்த நாட்டிற்கு சொந்தமானவர்கள் என வாஜ்பாய் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார் சுங்கச்சாவடி கட்டணங்கள் பற்றி வெளியாகின்ற செய்திகளையும் கேலி கிண்டல்களையும் சமூக ஊடகங்களில் பார்க்கிறேன் மக்களின் கோபம் நியாயமானது தான் ஆனால் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு சுங்க கட்டணங்கள் அவசியமாகிறது
சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் முக்கியம் இதற்காகவே ஒருமுறை நான் எனது 72 லிட்டர் அளவிலான சிறுநீரை சேர்த்து வைத்து அதனை எனது வீட்டு தோட்டக்காரரிடம் கொடுத்தேன் அதை அவர் இயற்கை உரமாக விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டார் என்று தனது பள்ளி முதல் அரசியல் வரை பேசியதோடு தனது பன்முக தன்மையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இயல்பாக பேசி உள்ளார்