ஆந்திரப் பிரதேசத்தின் யோகாந்திரா 2025 முன்முயற்சி: பிரதமர் மோடி பாராட்டு!
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் அருகே நடைபெற்ற யோகாந்திரா 2025 நிகழ்வில் யோகா ஆர்வலர்களின் துடிப்பான பங்கேற்பைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாராட்டினார். 2025 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் மூச்சடைக்க வைக்கும் புலிகுண்டு இரட்டை மலைகளுக்கு மத்தியில் ஒரு மாத காலம் நடைபெறும் இந்த நிகழ்வில் 2,000க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் கூடியிருந்தனர்.
மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் கூறியதாவது: "2025 ஆம் ஆண்டு யோகா தினத்தை முன்னிட்டு உற்சாகம் பெருகி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். யோகாந்திரா 2025 #Yogandhra2025 என்பது யோகாவை பிரபலப்படுத்த ஆந்திர மக்கள் மேற்கொண்ட பாராட்டுக்குரிய முயற்சியாகும். 21 ஆம் தேதி ஆந்திராவில் யோகா தினத்தைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன். யோகா தினத்தைக் கொண்டாடுமாறும், யோகாவை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ளுமாறும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.