ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்: வரலாற்று உண்மையை பகிர்ந்த துணை குடியரசுத் தலைவர்!

Update: 2025-06-21 07:01 GMT

புது தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் வளாகத்தில் நடைபெற்ற 7வது தொகுதி மாநிலங்களவை உள்ளகப் பயிற்சி திட்டத்தின் பங்கேற்பாளர்களுடன் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துரையாடினார். அவசரநிலை எனப்படும் ஒரு முக்கியமான வரலாற்று அத்தியாயத்தை நினைவுபடுத்திய அவர், “இன்று நான் ஏழு நாட்களுக்குள் ஒரு சோகமான ஆண்டு நிறைவாக வரும் ஒரு சம்பவத்தைப் பற்றி சிந்திக்கிறேன். 1975 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 28 -வது ஆண்டில் இருந்தது. அது ஜூன் 25, 1975 அன்று நள்ளிரவில் நடந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் வேண்டுகோளின் பேரில், அப்போதைய இந்திய குடியரசுதலைவர் ஃபக்ருதீன் அலி அகமது, நாட்டில் அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அது முதல் முறையாக நடந்தது.” என்று கூறினார்.


“ஒரு குடியரசு தலைவர், பிரதமர் என்ற ஒரு தனிநபரின், ஆலோசனையின் பேரில் செயல்பட முடியாது. அரசியலமைப்புச் சட்டம் மிகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. குடியரசு தலைவருக்கு உதவவும் ஆலோசனை வழங்கவும் பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழு உள்ளது. இதனை மீறி நடந்த ஒரு நடவடிக்கையின் விளைவு என்ன? இந்த நாட்டின் 100,000க்கும் மேற்பட்ட மக்கள் சில மணிநேரங்களில் சிறையில் அடைக்கப்பட்டனர்” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக நிறுவனங்களின் சறுக்கலைப் பற்றி சிந்தித்துப் பேசிய அவர், “அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டனர், நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். நமது அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல் போனது. நமது ஊடகங்கள் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டன. சில புகழ்பெற்ற செய்தித்தாள்கள் வெற்று தலையங்கங்களைக் கொண்டிருந்தன” என்றார். கைது செய்யப்பட்டவர்களின் ஒரு நெகிழ்ச்சியான கதையைப் பகிர்ந்து கொண்ட அவர், “உங்களுக்குத் தெரியுமா, திடீரென்று சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் யார்? அவர்களில் பலர் இந்த நாட்டின் பிரதமர்களானார்கள் - அடல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய், சந்திரசேகர். அவர்களில் பலர் முதலமைச்சர்கள், ஆளுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் திறமையானவர்கள். அவர்களில் பலர் உங்கள் வயதுடையவர்கள்.” என்றார்.

Similar News