பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்: அடிக்கல் நாட்டிய பிரதமர்!

Update: 2025-05-23 04:54 GMT

ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பெருமளவில் திரண்டிருந்தோரை வரவேற்றார். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து இணையதளம் வழியாக குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்றவர்களையும் வரவேற்றார். பல ஆளுநர்கள், முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பையும் அவர் எடுத்துரைத்தார். நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வில் இணைந்த அனைத்து பிரமுகர்களுக்கும், குடிமக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.


கர்னி மாதாவின் வாழ்த்துகளைப் பெற்று இந்த நிகழ்வுக்கு வந்திருப்பதாக குறிப்பிட்ட மோடி, இந்த வாழ்த்துகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் நாட்டின் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்தும் என்று உறுதிபட தெரிவித்தார். ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டுவது பற்றி குறிப்பிட்ட அவர், நாட்டின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் இவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். மாற்றத்திற்கான இந்த முன்முயற்சிகளுக்காக குடிமக்களுக்கு தமது வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் மாறி வரும் உள்கட்டமைப்பு பற்றி எடுத்துரைத்த பிரதமர், நவீனமயத்திற்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதோடு, கடந்த 11 ஆண்டுகளில் சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வேக்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் துரிதமான முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா தற்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டில் 6 மடங்கிற்கும் அதிகமாக முதலீடு செய்கிறது என்றும், இந்த முன்னேற்றம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். வடக்கே செனாப் பாலம், அருணாச்சலப் பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதை, கிழக்கே அசாமில் போகிபீல் பாலம் என நாடு முழுவதும் சிறப்புமிக்க உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். மேற்கு இந்தியாவை பொறுத்தவரை மும்பையில் அடல் பாலமும், தெற்கில் பாம்பன் பாலமும் இந்தியாவில் இந்த வகையில் முதலாவதாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News