கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதியுடன் கூடிய 3 கப்பல்கள்-கடற்படை தகவல்!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து மருத்துவமனைகள் மற்றும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதை சமாளிப்பதற்காக இந்திய கடற்படை சார்பாக 3 மருத்துவமனை கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
இவற்றில் INVS-ஜீவந்தி கோவா, INVS- பதஞ்சலி கார்வார்,மற்றும் INVS-சந்தானி மும்பை ஆகியவை உள்ளூர் நிர்வாகத்தின் பயன்பாட்டிற்காக சில கொவிட் படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.மும்பையில் பணியாற்றி வரும் வெளியூர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்லாமல் இருப்பதற்காக கடற்படை வளாகங்களில் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கும் கடற்படை அதிகாரிகள் எந்த நேரத்தில் எந்த விதமான கொரோனா அவசரகால உதவி செய்வதற்கு கடற்படை தயாராக உள்ளது என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கார்வாரில் உள்ள கடற்படை அதிகாரிகளும் இதேபோன்று விரிவான வசதிகளை செய்துள்ளதோடு சுமார் 1,500 இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் பொருட்கள் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை அளித்துள்ளனர். கொரோனா பாதிப்புள்ள பொதுமக்களுக்கு கடந்த வருடம் சிகிச்சை அளித்த முதல் பாதுகாப்பு படைகள் மருத்துவமனையான INVS-பதஞ்சலி அவசரகால தேவை எதேனும் ஏற்பட்டால் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க தயாராக உள்ளது.
கொரோனா நோய்தொற்றை சமாளிப்பதற்கான இந்தியா முழுவதும் அனைத்து தரப்பில் இருந்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதனால் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.