கொரோனா நோய்த் தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் கோவில் பணியாளர்களுக்கு ₹ 4000 ரூபாய் நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு துறையை சார்ந்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஊரடங்கு காரணமாக அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர கோவில் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ₹ 4000 ரூபாய் ரொக்கப் பணமும், 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த திட்டத்தின் மூலம் 14 ஆயிரம் திருக்கோவில்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் திருக்கோவில் வாயிலாக உரிமம் பெற்றவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை மூலம் பணியாளர்களுக்கு ₹ 4000 ரூபாய் ரொக்கப்பணம் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கொரோனா பெரும் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவில் பணியாளர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று மாதங்கள் உதவித்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு கோவில் பணியாளர்கள் ₹ 4,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது
கோவில் பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை போலவே மூன்று மாதங்களுக்கு உதவித்தொகை தமிழக அரசு வழங்கினால் தங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்ற கோவில் பணியாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.