உர நிறுவனங்கள் மூலம் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி - மத்திய அரசு தகவல்!
கொரோனா தொற்று இரண்டாவது அதை நாடு முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக காணப்பட்டு வருகிறது.
இதனால் அந்த மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடந்த வாரம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தியை மத்திய அரசு மேற்கொண்டு அனைத்து மாநிலத்திற்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கையையும் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொண்டது. அதனின் ஒரு பகுதியாக உர ஆலைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 50 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படவுள்ளது. முன்னதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் வழி ரசாயனம் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் இணை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொது, தனியார் மற்றும் கூட்டுறவு துறைகளைச் சேர்ந்த உர நிறுவனங்கள் தங்களது ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.
உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தற்போதைய பிராணவாயு உற்பத்தி அளவை மாற்றியமைத்து பெருந்தொற்று சமயத்தில் உதவும் வகையில் மருத்துவ பிராணவாயுவை மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர், உர நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார். இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த உர நிறுவனங்கள் மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
இதனால் இனி இந்த உரம் நிறுவனங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த வசதியை இறுதி ஆக்சிஜன் கட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு வழி வகுப்பார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு நாட்டில் இனி எந்த பகுதியிலும் இருக்காது என்று அனைவரும் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றனர்.