தமிழக உள்ளாட்சி அமைப்புக்கு 533.2கோடி ரூபாய் ஒதுக்கீடு- மத்திய அரசு!

Update: 2021-05-09 10:15 GMT

மத்திய நிதியமைச்சகத்தின் செலவு துறை மூலம் 25 மாநிலங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8,923.8 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த மானியம்ங்கள் கிராமங்கள், வட்டம் மற்றும் மாவட்டம் ஆகிய பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் மூன்று அடுக்குகளுக்கும் வழங்கப்படுகின்றன. 2021-22 ஆம் ஆண்டிற்கான முதல் தவணைக்கான தொகை சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பல்வேறு தடுப்பு மற்றும் மருத்துவம் சார்பான நடவடிக்கைகளுக்கு இந்த மானியத்தை பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த மானியத்தின் மூலம் பஞ்சாயத்துராஜ் அமைப்பு முறையின் மூன்று அடுக்குகளுக்கும் நிதி உதவிகள் கிடைக்கும்.மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை பட்டியலிட்டு உள்ளனர்.இதில் தமிழகத்திற்கு ₹ 533.2 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி நிபந்தனை இல்லாத நிதியின் முதல் தவணை 2021 ஜூன் மாதம் மாநிலங்களுக்கு விடுவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நோய் தொற்று அதிகம் பரவுவதன் காரணமாக உள்ளாட்சி அமைப்புகளில் நிதி வருவாய் அதிகரிப்பதற்காக முன்கூட்டியே இந்த தொகை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மானியங்கள் எளிதாக கிடைப்பதற்காக பல்வேறு நிபந்தனைகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News