சைப்ரஸின் ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாக்காரியோஸ் III’ விருதை பெற்ற பிரதமர் மோடி!

Update: 2025-06-17 14:30 GMT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சைப்ரஸின் உயரிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறும் பொழுது, "கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாக்காரியோஸ் III” விருதை எனக்கு வழங்கியதற்காக சைப்ரஸ் அரசிற்கும் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட மரியாதை மட்டுமல்ல. 1.4 பில்லியன் இந்தியர்களுக்கும் வழங்கப்பட்ட மரியாதை. இது அவர்களின் வலிமை மற்றும் அபிலாஷைகளுக்கான அங்கீகாரமாகும். இது நமது வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கும், "வசுதைவ குடும்பகம்", அதாவது "உலகமே ஒரு குடும்பம்" என்ற தத்துவத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

இந்தியாவிற்கும் சைப்ரஸுக்கும் இடையிலான நட்புறவுகளுக்கும், நமது பகிரப்பட்ட மதிப்புகளுக்கும், நமது பரஸ்பர புரிதலுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். அனைத்து இந்தியர்களின் சார்பாகவும் நன்றியுடன் இந்த விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த விருது, அமைதி, பாதுகாப்பு, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நமது மக்களின் செழிப்பு ஆகியவற்றிற்கான நமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் அடையாளமாகும்.


இந்தியாவிற்கும் சைப்ரஸுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான ஒரு பொறுப்பாக இந்த கௌரவத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். நமது கூட்டாண்மை வரும் காலங்களில் இன்னும் பெரிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன். மேலும், நமது நாடுகளின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் ஒன்றாக தொடர்ந்து பாடுபடுவோம்

Similar News