ஒரு லட்சம் பேரை மதம் மாற்றியும் அடங்காத NGOக்கள் - FCRA விதிகளைத் தளர்த்த அழுத்தம்!
பேரிடர்களைப் பயன்படுத்திக் கொண்டு மக்களை பெருமளவில் மதம் மாற்றும் மிஷனரிகள் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையும் விட்டு வைக்கவில்லை. கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து மத மாற்றத்துக்கு என்று பெற்ற நிதியை மிஷனரிகளும் NGOக்களும் பயன்படுத்தி வருகின்றன.
ஆனால் அது போதாது என்று சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து நிதி பெற மத்திய அரசு FCRA விதிகளில் கொண்டு வந்த கடுமையான விதிமுறைகளை தளர்த்துமாறும் நீக்குமாறும் பல வழிகளில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை இயக்குநர் அமிதாப் கண்ட் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்து கொண்ட NGOக்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் FCRA விதிகளைத் தளர்த்துமாறு பரிந்துரை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரபலமான, சந்தேகத்திற்குரிய பின்னணி கொண்ட சில NGOக்களும் இதில் அடக்கம் என்று Legal Rights Observatory அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த NGOக்கள் கொரோனா தொற்று சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விதிகளைக் தளர்த்தி மத மாற்ற செயல்பாடுகளில் ஈடுபட முயல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. இவ்வாறு நடக்க விட மாட்டோம் என்று Legal Rights Observatory அமைப்பு கூறியுள்ளது.
ஒரு வேளை NGOக்களின் கோரிக்கையை நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்தாலும் அதற்கு எதிராக தாங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் LRO அமைப்பு கூறியுள்ளது. மிஷனரி அமைப்புக்கள் கொரோனா தொற்றைப் பயன்படுத்தி 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை மதம் மாற்றியதை சுட்டிக் காட்டியுள்ள LRO, இப்போது மக்களுக்கு உதவி செய்கிறோம் என்று கேட்பதால் NGOக்களுக்கு சுதந்திரம் கொடுப்பது இந்தியாவுக்கும் இந்து மதத்துக்கும் பேராபத்தாக அமையும் என்று எச்சரித்துள்ளது.