கொரோனாவை கட்டுபடுத்த ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத டெல்லி அரசு - RTIல் அதிர்ச்சி தகவல்!
கொரோனா தொற்று காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக டெல்லி முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்ட நிதியில் ஒரு ரூபாய் கூட கொரோனா முன்னெச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு செலவு செய்யாமல் இருந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய இரு மாநிலங்கள் தான். இதற்கு முக்கிய காரணம் இந்த இரு மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும்தான். குறிப்பாக டெல்லி மாநில அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தங்களது மெத்தனப் போக்கை காட்டியுள்ளது என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் டெல்லி அரசுக்கு கடந்த மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டுமுதல் ஜனவரி 2021ஆம் ஆண்டு வரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 35 கோடி ரூபாய் வரை நிதி கிடைத்துள்ளது. இந்த முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 18 கோடி ரூபாய் வரை அரசு செலவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இவற்றில் ஒரு ரூபாயை கூட கொரோனா நோய்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு செலவு செய்யவில்லை என்று அதிர்ச்சியான தகவல்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றை தனி மனிதன் ஒருவனால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்றால் அது இயலாத காரியமாகும். அனைத்து மாநில அரசுகளும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே கொரோனா என்ற கொடிய நோயை விரட்ட முடியும் என்பது அனைவரின் கருத்துக்களாக இருந்துவருகிறது. எனவே அந்தந்த மாநில அரசுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.