சிறப்பு கட்டுரை: கொரோனா - வீறுநடை போடும் இந்தியா! (பகுதி 1)

சிறப்பு கட்டுரை: கொரோனா - வீறுநடை போடும் இந்தியா! (பகுதி 1)

Update: 2020-04-10 12:27 GMT

வீறுநடை போடும் இந்தியா! கொதிக்கும் எதிர்கட்சி கோமாளிகள்

இந்த வாரத்தின் தலைப்பு செய்திகள் பிரதமர் மோடி வேண்டுகோள்படி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விளக்கு ஏற்றியதை குறித்த செய்திகளுடன் துவங்கியது.

கடந்த 14 நாட்களாக பாதிகடல் தாண்டி வந்த போதிலும் பெரிய அளவு முணுமுணுப்பு இல்லாத நிலையில் திடீர் என்று வெகுண்டு எழுந்ததை போன்று நடிகர் கமல்ஹாசன் ஒரு நீண்ட அறிக்கையை பிரதமருக்கு எதிராக வெளியிட்டார். முழுக்க படித்து புரிந்து கொள்ள யாரும் பெரிதாக பிரயத்தனம் செய்யவில்லை. அவ்வளவு எளிதாக தெரியாத மொழியில் வழக்கம் போல ஆறுபக்க அட்டைகத்தி வீசினார் கமல்.

ஆனாலும் அதன் விளக்க உரை மூன்று விஷயத்தை விஷம் போல கக்கியது.

ஒன்று, அடுப்பங்கரையில் எண்ணெய் இல்லை, இதில் விளக்கு எரிக்க எண்ணெய் வேண்டுமா?

இரண்டு, மக்களை பால்கனியில் நிற்க வைக்காதீர்கள்

மூன்று, தெளிவாக திட்டமிடாமல் ஊரடங்கை அமல்படுத்தினார் பிரதமர்.

என்ன தான் வேண்டும் கமல் வகையறாவுக்கு?

கமல் ஒரு நல்ல நடிகர், தனிமனித தாக்குதல் அல்ல நம் நோக்கம். ஆனால் அவர் இன்று வரை நாட்டுக்கு, ரசிகர்களுக்கு என்று ஒரு கிள்ளுகீரை வரை பறித்து போட்டதில்லை என்பது கசப்பான உண்மை.

ஆனால் மக்களுக்கு வேண்டி இரவுபகல் பாராமல் பாடுபடுவதை போன்று இயல்பு வாழ்க்கையில் நடித்து கொண்டே இருப்பார். 2015ல் சென்னை பெருவெள்ளம் ஏற்பட்ட பொழுது, இதே போன்று மடல் எழுதி அரசுக்கு நிதி அளிக்க மாட்டேன் என்று திறம்பட கூறினார். என்னிடம் பணம் கேட்டு வந்துவிடாதீர்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு நுட்பம் இது.

கட்சியை ஆரம்பித்தார், தொண்டர்கள் செலவுக்கு பணம் கேட்டு விடுவனரோ என்று முன்கூட்டியே நன்கொடை அளிக்குமாறு மடல் எழுதினார். மக்கள் சேவை செய்யவேண்டிய நேரத்தில் கூட பிக்பாஸ் ஷூட்டிங், மற்றும் இந்தியன்-2 திரைப்படம் என்று நடித்து கொண்டே இருந்தார். பாவம் அவருக்கு பணத்தேவை அதிகம்.

இந்தியன்-2 திரைப்பட வளாகத்தில் நடந்த விபத்துக்கு கூட சட்டென்று தயாரிப்பாளர் மீது பொறுப்பை தட்டிவிட்டார். விபத்திற்கு யார் காரணம் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது வேறு விஷயம். அது போல தான், தன்னிடம் பணம் கேட்டு விடவேண்டாம் என்பதற்கு தான் இந்த மடல் என்று நாம் கடந்து போகலாம்.

ஆனாலும் மேலும் எதோ ஒன்று நெருஞ்சி முள்ளாய் இடருகிறது.

கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஞாயிறு அன்று ஒட்டுமொத்த இந்தியர்களும் பிரதமர் அழைப்பை ஏற்று ஒன்றுபட்டு நின்றதை கண்டு மனம்வெதும்பிய கம்யூனிஸ்ட்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பொருமலாகவே தெளிவான தோற்றம் அளிக்கிறது.

ஞாயிறு காலை வரை மின் அழுத்தம் பற்றி மன அழுத்தம் கொண்டு வகுப்பெடுத்த உண்டியல் கட்சியினர் தங்களது அனைத்து அஸ்திரங்களும் தவிடுபொடியாகிய நிலையில் கையறுநிலையில் கமலை கொண்டு புலம்ப வைத்துள்ளனர் என்று தான் தெளிவாக புரிகிறது.

கமலும் கம்யூனிஸ்ட்களும்

கமலுக்கு கம்யூனிஸ்ட்கள் மீது வேற எந்த நடிகையை விடவும் தீரா காதல். ஆனால் அந்த உண்டியல் குலுக்கை கட்சியில் சட்டதிட்டங்கள் அதிகம், பணமும் பெயராது. தலைமை பதவியும் சட்டென்று கிடைக்காது. அதனால் தான் தனிக்கடை போட்டார். ஆனாலும் தன் அபிமான கட்சியின் அதிமேதாவித்தன செயல்பாடுகளுக்கு ஆதரவாகவே நின்றார்.

நவம்பர் மாத கடைசியில் சீனாவில் துவங்கிய Coronovirus சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் கண்ணாமூச்சி விளையாட்டால் இன்று உலகமே ஸ்தம்பித்து நிற்க காரணமாகி விட்டது. இது சீனாவே உருவாக்கிய உயிரியல் போர் என்றும் இது சீனாவே உருவாக்கிய கிருமி என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும் தருந்த ஆதாரம் வெளியிடப்படாத காரணத்தால் நாம் அதற்குள் போக விரும்பவில்லை. ஆனாலும் கிடைத்த வாய்ப்பை எங்கனம் சீனா பயன்படுத்தி கொண்டது என்பதை தான் பார்க்க வேண்டும்.

சீன ஆக்டோபஸ்

அமெரிக்கா, ரஷ்யா என்று இரு ஜாம்பவான்கள் கோலோச்சிய உலக அரங்கில் சிலபல வருடங்களாகவே சீனா தன்னை முன்னிலை படுத்தி கொள்ள துவங்கியது

பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகளின் கட்டுமானத்திற்கு பெருமுதலீடு செய்து அவற்றை தன் அடிமைகளாக சாசனம் செய்தது.

சமீபத்தில் ரஷ்யாவின் விளாடிவெஸ்டாக் துறைமுக கட்டுமானத்திற்கு இதே போன்று மறைமுக திட்டம் சீனா வகுக்கையில் இந்தியா முந்திகொண்டு ரஷ்யாவிற்கு உதவியது.

இந்த யுக்தியை பயன்படுத்தி இனி எவ்வளவு காலம் தான் உலக நாடுகளை கையகப்படுத்த முடியும்? ஒன்று பணத்தால் வீழ்த்த வேண்டும், இல்லை எனில் ஆயுதம் கொண்டு வீழ்த்த வேண்டும். மூன்றாவது பண்டைய கிழக்கு இந்திய கம்பெனி கொண்டு பிரிட்டிஷார் செய்த வெற்றிகரமான செயல், வியாபாரம்.

நவம்பர் 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவுதலை சீன மருத்துவர்கள் கண்டுபிடித்தாலும் அதை ஜனவரி 15, 2020 வரை மூடிமறைத்த பெருமை சீன அரசையும் உலக சுகாதார நிறுவனத்தையுமே சாரும்.

ஜப்பான் அரசும், தைவானும் மனிதனால் மனிதனுக்கு பரவும் பேராபத்தை சுட்டிக்காட்டிய பின்பும் உலக சுகாதார நிறுவனம் (WHO) அதை தட்டி கழித்தது.

சீனாவில் இருந்து பெருவாரியான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு பரவிய பின்னர் மெல்ல WHO இதை ஒப்புகொண்டு பயணகட்டுப்பாடுகளை விதித்தது

அதற்குள் காரியம் கை மீறி சென்றது. அசட்டையாக இருந்தே பழக்கபட்ட ஐரோப்பாவும், அமெரிக்காவும் தலைக்கு மேல் வெள்ளம் வந்த பின் தான் விழித்து கொண்டனர்.

ஆனால் சீனா ஒன்றுமே நடவாதது போல இயல்பு நிலைக்கு திரும்பியதாக தோற்றம் கொடுத்தது. மரண ஓலம் உலகெங்கும் ஒலிக்கும் போது சீனா தனது வியாபாரத்தை துவங்கியது. முக கவசம், பரிசோதனை கருவிகள் என்று சுறுசுறுப்பாக ஏற்றுமதியை கொண்டு நாடுகளை விலைக்கு வாங்க துவங்கியது

சீனாவில் மரண எண்ணிக்கை ஏன் 3000த்தை கடக்கவில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை.

அதே வேளையில் சீனா தனது உற்பத்தி சார்ந்த தொழில் நகரங்களை முன்கூட்டியே தனிமைப்படுத்தியது என்ற செய்திகளும் வந்தன. தெளிவான திட்டமிடல் என்றும் கூறலாம்.

சீனா இந்த பேரழிவை திட்டமிட்டு ஏற்படுத்தியது என்பதற்கு இதைவிட சான்றும் வேண்டுமோ?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாக சீனாவையும் உலக சுகாதார நிறுவனத்தையும் குற்றப்படுத்தி உள்ளார். மற்ற நாடுகளும் சீனாவின் சில்லறைத்தனங்களை துகிலுரிக்க வழிமொழியும் என்பதில் சந்தேகம் இல்லை.

சிறுபுத்தி கொண்ட சீனா, ஆஸ்திரேலியாவில் பெரு நிறுவனங்களை கையைகப்படுத்தியது. பிரான்ஸ் அரசிடம் வெளிப்படையாக தனது 5G கருவிகளை வாங்கவில்லை எனில் மருத்துவ உபகரணங்கள் தரமாட்டோம் என்று மிரட்டியது.


நிற்க, இதற்கும் கமலுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது.

இந்த இடைவெளியில் இந்தியா என்ன செய்தது என்று அடுத்து பார்ப்போம்.

*The Story was first published in www.vaanaram.in

Similar News