1 லட்சம் பேர் குவிந்த குடும்ப சுற்றுலா பயணிகள் ! களைகட்டும் மாமல்லபுரம்!

1 லட்சம் பேர் குவிந்த குடும்ப சுற்றுலா பயணிகள் ! களைகட்டும் மாமல்லபுரம்!

Update: 2019-10-14 05:47 GMT

சீன அதிபர் பிரதமர் மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இது வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. உலகம் தங்களின் பார்வையை தமிழகம் மற்றும் மாமல்லபுரத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
ஏன் மாமலாபுரத்தை மோடி தேர்வு செய்தார் என்பது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது எல்லோரும் மாமல்லபுரம் வரலாற்றை கூகிளில் தேடி வருகின்றனர்.


சென்னையை சுற்றியுள்ள மக்கள் மாமல்லபுரத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதுவும் அங்கு சென்று ஓவ்வொரு சிற்பம் கலை நயங்களை கேட்டு தெரிந்து கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி சீன அதிபர் வருகைக்கு பிறகு குடும்பம் குடும்பமாக மகாபலிபுரத்தில் படையெடுத்து வருகின்றனர்.


மாமல்லபுரம் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றது. அர்ஜூனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம் போன்ற இடங்களில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் பாலிதீன் பைகள் இல்லாத மாமல்லபுரமகா திகழ்வது இன்னொரு சிறப்பு அம்சம்


இது மட்டுமில்லாமல் இத்தனை காலங்களாக பார்த்த வந்த மாமல்லபுரம் இப்போது புதிதாக புதுப்பொலிவுடன் இருப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். அதன் வரலாறு முக்கியத்துவம் மோடி வந்து சென்ற பிறகுதான் தங்களுக்கு தெரிகிறது என பெருமையுடன் கூறுகின்றனர். வரலாற்றை எங்களுக்கு தெரிந்து கொள்ள வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளனர்.


Similar News