இந்தியப் பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு கொண்டு வந்தவர் பிரதமர் மோடி.. மத்திய அமைச்சர் அமித்ஷா..

Update: 2024-04-28 16:44 GMT

பயங்கரவாதம் மற்றும் நக்சலைட் தாக்குதல்களை ஒழிக்க மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது இது பற்றி அவர் கூறும் பொழுது காஷ்மீருக்கும் குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்ய பிறகு ஒரு கல் வீச்சு சம்பவம் கூட நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.


நக்சலைட் தாக்குதல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். பயங்கரவாதம் மற்றும் நக்சலைட் தாக்குதல்களை ஒழிக்க மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும். மக்கள் அதற்காக தங்களுடைய ஓட்டுக்களை செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.


கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி ஓட்டு வங்கியைப் பற்றி கவலைப்படாமல் பல்வேறு முடிவுகளை எடுத்தார். இரண்டு கட்ட தேர்தல்களுக்குப் பிறகு, மோடியை 3வது முறையாக பிரதமர் ஆக்க நாட்டு மக்கள் முடிவு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என அவர் பேசினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News