கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு ₹1,125 கோடி வழங்கிய விப்ரோ!

கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு ₹1,125 கோடி வழங்கிய விப்ரோ!

Update: 2020-04-01 12:56 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது இதனால் இதுவரை 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இதனால் 1600-க்கும்  அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.

மேலும் பிரதமரின் நிவாரண நிதிக்கும் மற்றும் மாநில நிவாரண நிதிக்கும் பல்வேறு பிரபலங்கள்,நடிகர்கள் தொழிலதிபர்கள் தங்களது நிவாரண நிதி உதவியை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது விப்ரோ நிறுவனம், விப்ரோ என்டர்ப்ரைஸ்ஸ் நிறுவனம் மற்றும் ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து ரூபாய் 1,125 கோடி நிதியுதவி கொரோனாவிற்காக வழங்கியுள்ளது. 

Similar News