திருந்தாத சீனர்கள் - கொரோனாவுக்கு குட் பை சொன்ன சீனாவில் மீண்டும் பாம்பு, தேள், நாய், பூனை இறைச்சி அமோக விற்பனை!

திருந்தாத சீனர்கள் - கொரோனாவுக்கு குட் பை சொன்ன சீனாவில் மீண்டும் பாம்பு, தேள், நாய், பூனை இறைச்சி அமோக விற்பனை!

Update: 2020-04-01 04:38 GMT

சீனாவில் 82,342 பேருக்கு வைரஸ்கள் பரவியதாக உலகளாவிய புள்ளி தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில், அண்மையில் கொரோனா வைரஸுக்கு எதிராக தாங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டதாக சீனா பெருமையாக சொல்லிக் கொள்கிறது.

இன்னொரு புறம் இந்த வைரஸ் பரவியதன் பின்னணி என்ன, 5 மாதங்களில் வூஹானில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் எவை என்பதை மூச்சு விட சீனா மறுத்து வருகிறது. ஐ.நா பாதுகாப்பு சபையில் மற்ற உறுப்பு நாடுகள் அறிக்கை வெளியிட வலியுறுத்திய போதும் வெளிப்படையாக சொல்லாமல் அடம் பிடிப்பதுடன் தீர்மானம் தொடர்பான பேப்பரையும் சீனா வீசி எறிந்தது.

ஆனால், வைரஸ் தொற்றுக்கு காரணம் விஷத்தன்மை கொண்ட பாம்புகள், தேள்கள், வவ்வால்கள் சாப்பிடும் பழக்கம் சில சீனர்கள் இடம் இருப்பதை உலக மருத்துவர்கள் மறுக்கவில்லை. அதே சமயம், சீனாவும் எங்களை பற்றியும், எங்கள் நாட்டு பழக்கங்கள் பற்றியும் உலக நாடுகள் அவதூறு செய்வதாக கோபித்துக் கொள்கிறது. ஆனால், தங்கள் பழக்கம் குறித்து அந்த நாடு மறுப்பு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கடுமையான வைரஸ் பரவலை அடுத்து சென்ற ஜனவரி மாதம் நாய்கள், பூனைகள், வவ்வால்கள்,பாம்புகள் கறி விற்பனை செய்யும் கடைகளை சீனா மூடிவிட்டது. ஆனால் இப்போது மீண்டும் அந்த கடைகளை அனைவரும் திறந்து விட்டனர் என்று சீன நாட்டு பத்திரிக்கையான டெய்லி மெயிலின் உள்ளூர் நிருபர்கள் புகைப்படங்களுடன் தெரிவிக்கின்றனர்.

"மீண்டும் சீனாவின் மாமிச சந்தைகள் கொரோனா வைரஸுக்கு முன்பு இருந்ததைப் போலவே செயல்படத் திரும்பியுள்ளன. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், போலீஸ்காரர்கள் இப்போது புகைப்படம் எடுப்பதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள், இதற்கு முன்பு இது போல நடந்ததில்லை." என்று டெய்லி மெயில் நிருபர் ஒருவர் கூறினார்.

இந்த நிலையில் மற்றொரு நிருபர் தென்மேற்கு சீன நகரமான குயிலினில் நோய்களை தீர்க்கும் மருந்துகள் இவை என வவ்வால்கள், பாம்புகள், சிலந்திகள், பல்லிகள் மற்றும் தேள் ஆகியவை விற்பனை செய்யப்படுவதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். 

Similar News