மகிழ்ச்சி ஒன்னும் மேஜிக் இல்லீங்க இந்த 13 டிப்ஸ் பாலோ பன்னா போதும்!!

மகிழ்ச்சி ஒன்னும் மேஜிக் இல்லீங்க இந்த 13 டிப்ஸ் பாலோ பன்னா போதும்!!

Update: 2020-02-04 02:41 GMT

கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்: உங்கள் வாழ்வில் உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய பத்து விஷயங்களை பட்டியலிடுங்கள். உங்களுக்கு நிகழ்ந்த நன்மைகள் குறித்து கவனம் குவித்து களித்து மகிழுங்கள்.



உடற்பயிற்சி: ஒருநாளில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவரின் மனநிலை மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும், அழுத்தம் மற்றும் வருத்தம் ஆகிய எதிர்மறை எண்ணங்கள் வெகுவாக குறைவதாகவும் நிபுணர்கள் சொல்கிறார்கள்



காலை உணவு: சில மனிதர்கள் காலை உணவை தவிர்பவராக இருப்பார்கள். நேரமின்மை அல்லது டயட் என்ற பெயரில் காலை உணவை தவிர்பார்கள். ஆனால் ஆய்வுகள் சொல்கின்றன காலை உணவு பெரும் ஆற்றலை உடலுக்கும் உள்ளத்திற்க்கும் வழங்குகிறது அன்றைய நாளின் அன்றாட நிகழ்வுகளில் வெற்றிக்கொள்ள பெரும் பங்கு வகிக்கிறது. எனவே எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்காதீர்கள்



அனுபவங்களுக்கு செலவு செய்யுங்கள்: இன்றைய தலைமுறையில் 75% பேர் பயணம், பயிற்சி வகுப்புகள் ஆகிய அனுபவம் சார்ந்த விதத்தில் முதலீடு செய்வதிலேயே மகிழ்ச்சி அடைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. மீதமுள்ள சதவீதத்தினரே மற்ற பொருள்தன்மை வாய்ந்ததை வாங்குவதில் மகிழ்வு கொள்கின்றனர். நீங்கள் எந்த ரகம்?
சவாலை சந்தியுங்கள்: நீங்கள் எவ்வளவு தூரம் ஒரு விஷயத்தை தள்ளி போடுகிறீர்களோ அந்த நீட்சியில் உங்கள் வெறுப்பு, வேலைபளூ, அழுத்தம் ஆகியவைகளையும் சேர்த்தே சுமக்கிறீர்கள். எனவே சிறு சிறு வேலை பட்டியலை தயாரியுங்கள் அதை உடனே முடித்திடுங்கள்.



உங்களை சுற்றி அழகான நினைவுகளை பசுமையாக வைத்திருங்கள். உங்கள் மேஜை, குளிர்சாதன பெட்டி, உங்கள் கணினி முன்பு, உங்கள் அறையில் என எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் உங்கள் வாழ்வின் அழகிய மகிழ்வான தருணங்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.



பிறரை மதிப்புடன் நடத்துங்கள். எத்தனை கடினமான பிரச்சனையாக இருந்தாலும் சிறு புன்னகை அதை மாற்றும் வல்லமையுடையது என்பதை நம்புங்கள்.


செளகரியமான காலணிகளை அணிந்து கொள்ளுங்கள். ஏதோவொரு விதத்தில் அது உங்களுக்கு தொந்தரவாக இருக்குமே ஆயின் அது உங்களுடைய நாளின் உற்சாகத்தையே குறைக்ககூடும் என்கிறார் அமெரிக்க எலும்பியல் மருத்துவ சங்கத்தின் தலைவர், மருத்துவர். கெயிந்த் வாப்னர் அவர்கள்.



உங்கள் உடல்மொழியில் கவனம் செலுத்துங்கள். தோள்பட்டையை லேசாக பின்னுக்கு தள்ளி நேராக நடக்க பழகுங்கள். முன்னோக்கிய பார்வை அன்றைய நாளின் உற்சாக மனநிலையை கூட்டும்.


சிறந்த இசையை கேளுங்கள்: சிறந்த இசையை கேட்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்கள் பாட எத்தனிப்பீர்கள் அந்த செயல் உங்கள் மனதை இலகுவாக்கி நல்ல மகிழ்வான மனநிலையை கொடுக்க வல்லது.


நீங்கள் என்ன உணவு உண்கிறீர்களோ அது உங்கள் மனநிலையை தீர்மானிக்கும். எனவே உணவை தவிர்காதீர்கள். ஒவ்வொறு 3 அல்லது 4 மணி நேர இடைவெளியில் குறைந்த அளவு சாப்பிடுங்கள். உங்கள் சர்க்கைரையின் அளவை கட்டுபாட்டில் வைத்திருங்கள். அளவுக்கதிகமான தாது மற்றும் சர்க்கரையை தவிர்த்திடுங்கள்.



சுய அக்கறை கொள்ளுங்கள். “நம் தோற்றம் நல்ல முறையில் இருக்கிறது” என்கிற எண்னமே 70% நம்பிக்கையை, மகிழ்ச்சியை தரக்கூடியது என்கிறார்கள் நிபுணர்கள்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக கடவுளை நம்புங்கள்.



கவனீத்திருக்கிறீர்களா….?பெரும்பாலான நேரங்களில் வீட்டிலிருக்கும் தொலைகாட்சி சானலை மாற்ற நினைத்தால் அதன் ரிமோட் தொலைந்திருக்கும் நமக்கே தெரியாமல் பல முறை அதன் மேலே அமர்ந்திருப்போம். மகிழ்ச்சி கூட அது போலத்தான் அதன் மேலே அமர்ந்து கொண்டு அந்த விழிப்புணர்வு இல்லாமல் நம்மை சுற்றியுள்ள இடங்கள் அனைத்திலும் மகிழ்ச்சிய தேடி அலைகிறோம்.


இவை குறிப்பளவில் சிறியவைகளாக இருந்தாலும் நமக்கு தரவிருக்கும் இன்பமும், சந்தோஷமும் நிச்சயம் அளப்பரியாததாகத்தான் இருக்கும்.


Similar News