புதுச்சேரி : ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திறக்கப்பட்ட கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளி வாசல்கள் - சமூக இடைவெளியை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.!

புதுச்சேரி : ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திறக்கப்பட்ட கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளி வாசல்கள் - சமூக இடைவெளியை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.!

Update: 2020-06-08 04:52 GMT

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் மூடப்பட்டன இதன் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட முடியாமல் தங்களின் வீடுகளில் சாமி தரிசனம் செய்து வந்தனர் மேலும் வழிபாட்டு தளங்களை திறக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையையும் விடுத்தனர். இதனையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தளங்களும் மாநில அரசின் உத்தரவின் படி திறக்கப்பட்டது. 


 இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில், வரதராஜ பெருமாள் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் காலை திறக்கப்பட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதித்தனர். இதேபோல் கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமிய பள்ளி வாசல்களும் திறக்கப்பட்டன.

75 நாட்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்பட்டு கைகள் சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.


இதேபோல் கோவிலுக்குள் பிரசாதம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. வழிபாட்டு தளங்களை மீண்டும் திறந்து சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு பக்தர்கள் நன்றியை தெரிவித்தனர். 

Similar News