சிங்கப்பூரில் முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Update: 2024-09-07 16:25 GMT

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தின் போது உலகின் முதல் திருவள்ளுவர் கலாச்சார மையம் நிறுவப்படும் என்று அறிவித்தார். தமிழ் சமூகத்தின் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த குறிப்பிடத்தக்க முயற்சி அமைக்கப்பட்டுள்ளது.

திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். தமிழ் மொழியின் இலக்கிய வளம் , கலாச்சார சிறப்புகள் குறித்து வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூக வலைதளத்தில் பதிவில் சிங்கப்பூரில் தமிழ் மொழி, நாகரீகம், பண்பாடு இவற்றை வளர்க்கவும் பேணிக்காக்கவும் திருவள்ளுவர் கலாச்சார மையம் ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாச்சார மையம் அமைப்பதற்கு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் வரவேற்பு பாராட்டு குவிந்து வருகிறது. இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கை உலக அளவில் தமிழ் சமூகத்தால் பாராட்டப்பட்டது மற்றும் இரு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது கண்கூடாகத் தெரிகிறது.


ஆதாரம்:Thecommunemag

Similar News