புதுசேரி : கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் - அடக்கம் செய்த அமைப்பினர்.!

புதுசேரி : கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் - அடக்கம் செய்த அமைப்பினர்.!

Update: 2020-06-12 06:11 GMT

புதுச்சேரியில் கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சவக்குழியில் வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட82 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது.

இதனையடுத்து அரசு பொதுமருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மருத்துவமனையை சுற்றி கிருமி நாசினி அடிக்க உத்தரவிட்டார். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களை உரிய முறையில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட கிட்டை பார்வையிட்டார்.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் சடலத்தை உரிய முறையில் அடக்கம் செய்ய உதவப்படும் என பாப்புலர் பிரண்டஸ் ஆப் இந்தியா என்ற தொண்டு அமைப்பு உழவர்கரை நகராட்சியில் கோரியதை அடுத்து அதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்த முதியவர் உடலை தன்னார்வு அமைப்பை சேர்ந்தவர்கள் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை சவக்கிடங்கில் இருந்து ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்று கருவடிக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்தனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உயிரிழக்கும் உடலை உறவினர்களே வாங்க் மறுக்கும் வேலையில் சமூக ஆர்வலர்கள் முன்வந்து உடலை அடக்கம் செய்வது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.

Similar News