நிலவில் சொந்தமாக நிலம் வாங்கிய முதல் இந்தியன் - சுஷாந்த் சிங் ராஜ்புத்.!

நிலவில் சொந்தமாக நிலம் வாங்கிய முதல் இந்தியன் - சுஷாந்த் சிங் ராஜ்புத்.!

Update: 2020-06-15 12:51 GMT

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் முதன்முதலில் நிலவில் நிலம் வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நேற்று அவர் அவருடைய இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எம்எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்திய திரை உலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு பல துறைகளில் இருப்பவர்கள் மறைவுக்கு அஞ்சலியை தெரிவித்துள்ளார்.

தற்போது சுஷாந்த்தின் சொத்துக்களை பற்றிய விவரத்தை மனோரமா இணையதளம் வெளியிட்டது: அதில் ஒரு படத்திற்கு ஐந்து முதல் ஏழு கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் செயின்ட் கெய்ர்ன்ஸ் என்ற உயர் நிலைப்பள்ளியில் அவருடைய ஆரம்ப படிப்பை முடித்தார். பின்னர் டெல்லியில் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து உள்ளார்.


பாலிவுட்டில் ஒளிபரப்பாகும் சீரியல் மூலம் ஒரு நடிகராக அறிமுகமானார். சுஷாந்த் சொந்தமாக நிலவில் நிலத்தை வாங்கியுள்ளார். இதனால் இந்தியாவிலேயே சொந்தமாக நிலவில் நிலம் வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் மாரே மஸ்கோவின்ஸ் என்ற பகுதியில் சிறிய நிலத்தை வாங்கியுள்ளார். மேலும், Meade 14″ LX600, என்கிற விலையுயர்ந்த நவீன டெலஸ்கோப்பையும் சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த டெலஸ்கோப்பை வைத்து சனிகிரகத்தில் மோதிர வளையங்களை பார்த்து ரசிப்பாராம்.

சுஷாந்த்துக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு அவருடைய ரசிகர் நிலவில் நிலத்தை வாங்கி பரிசாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Similar News