ஐ.நாவில் முக்கிய பதவி வகிக்கும் இந்தியப் பெண்!
ஐ.நா-வில் முக்கிய பொறுப்பில் இந்தியப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தோனேஷியாவில் ஐ.நாவின் ஒருங்கிணைப்பாளராக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் பிறப்பித்துள்ளார். இந்த பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.
ஐ.நாவில் பருவநிலை மாற்றம் , நிலையான வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் சமூகக் கொள்கை ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இந்தோனேஷியாவில் ஐ.நாவின் ஒருங்கிணைப்பாளராக கீதா சபர்வால் நியமிக்கப்படுவதற்கு அந்நாட்டின் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்னர் கீதா சபர்வால் தாய்லாந்தில் ஐ.நா ஒருங்கிணைப்பாளராகவும் இலங்கையில் அமைதி ஏற்படுத்துதல் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நாவின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
SOURCE :Dinaseithi