15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை:புதிய முறையை அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம்!

Update: 2025-06-19 11:53 GMT

வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் புதிய செயல்முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது அதன்படி வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிப்பவர்கள் 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது தொடர்பாக புதிய வழிமுறையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

அதன்படி புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களில் மாற்றம் செய்யும்பொழுது 15 நாட்களுக்குள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் மேலும் இந்த புதிய நடைமுறையில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை செயலாக்கம் முதல் தபால் துறையின் மூலமாக வாக்காளரிடம் வழங்கப்படும் வரை ஒவ்வொரு நிலையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் இருக்கும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு கட்டத்திலும் வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையின் நிலையை குறுஞ்செய்தி வாயிலாக தெரிந்து கொள்வர் 

Tags:    

Similar News