ரயில் நிலையத்துக்கு வந்து சென்ற டெல்லி மாநாட்டு பயணிகளால் ரயில்வே ஊழியர்கள் 15 பேருக்கு தொற்று? தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு..

ரயில் நிலையத்துக்கு வந்து சென்ற டெல்லி மாநாட்டு பயணிகளால் ரயில்வே ஊழியர்கள் 15 பேருக்கு தொற்று? தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு..

Update: 2020-04-09 05:37 GMT

டெல்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையம் நிஜாமுதின் ரயில் நிலையம். சமீபத்தில் இப்பகுதியில் நடைபெற்ற தப்ளிக் ஜமாஅத் இஸ்லாமிய சமய மாநாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் மாநாடு நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள நிஜாமுதீன் ரயில் நிலையம் வந்திருந்த மாநாட்டு பயணிகள் மூலம் அங்கு பணியாற்றிய ரயில் முன்பதிவு மேற்பார்வையாளர் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மூலம் ரயில்வே மருத்துவமனை பணியாளர்கள் 15 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது.

அவர் சென்ற மார்ச் 31 ந்தேதி அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோத்தித்த மருத்துவ குழுவினர் மேல் சிகிச்சைக்காக ராம்மனோகர் லோகொயா மருத்துவமனைக்கு சென்ற 2 – ந்தேதி அனுப்பிவிட்டனர்.

இப்போது 58 வயதாகும் அந்த ரயில்வே பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு 3 நாட்களாக சிகிச்சை அளித்த நான்கு டாக்டர்கள் உட்பட 15 சுகாதார பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

Source: https://www.opindia.com/2020/04/coronavirus-nizamuddin-rail-station-employee-infect-15-doctor-nurse-railway-hospital/   

Similar News