தீவிரவாதிகளின் கோட்டை தான் பாகிஸ்தான் - அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு.!

தீவிரவாதிகளின் கோட்டை தான் பாகிஸ்தான் - அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு.!

Update: 2020-06-26 05:01 GMT

பாகிஸ்தான் தற்போதும் பயங்கரவாதிகளின் சொர்க்கமாக உள்ளது என அமெரிக்கா கடும் குற்றம்சாட்டியுள்ளது. தீவிரவாதிகளை அழிப்பதற்கு அனைத்து நாடுகளும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தைத் பின்பற்றி செயல்படவேண்டும் என ஐநா கூறியுள்ளது.

தீவிரவாதிகளை தடுக்கும் நடவடிக்கை பற்றி ஒரு அறிக்கையை ஐ.நா.,வில் அமெரிக்கா தாக்கல் செய்தது. அதில் குறிப்பிட்டது; சென்ற 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பாகிஸ்தான் நாட்டை மையமாக கொண்ட லஷ்கர் -இ - தொய்பா அமைப்பு பெரும் தாக்குதலை நடத்தியது. இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து பயங்கரவாதிகளுக்கு நிதி கொடுப்பதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் தற்போதும் தீவிரவாதிகளின் கோட்டையாக இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது


இதனைத்தொடர்ந்து ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியது: தீவிரவாதிகளை அழிக்கும் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தைத் பின்பற்றி செயல்படவேண்டும். தீவிரவாதம் உலகின் பெரும் அச்சுறுத்தல் மற்றும் அதனை முறியடிக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து நடக்க வேண்டும்.

இவ்வாறு ஐநா பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.  

Similar News