சீனா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஜொமேட்டோ டி-சர்ட்டை தீ வைத்து எரித்த ஊழியர்.!

சீனா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஜொமேட்டோ டி-சர்ட்டை தீ வைத்து எரித்த ஊழியர்.!

Update: 2020-06-28 07:51 GMT

கடந்த 16ஆம் தேதி இந்திய - சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா-சீனா இடையே பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. பின்னர் இந்தியாவில் உள்ள பல இடங்களில் சீனாவை கண்டித்தும் மற்றும் பொருட்களை தவிர்ப்பதற்கு பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், சீனா நாட்டின் பொருட்களை,செயலிகள் போன்றவற்றை இந்தியா மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.

தற்போது கொல்கத்தாவில் பெஹலாவில் சீனா நாட்டின் தயாரிப்புக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த போராட்டத்தில் சீனா பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற முழக்கங்கள் எழுந்துள்ளது.

இந்த போராட்டத்தில் ஜொமேட்டோ நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கலந்து கொண்டுள்ளார். அதில் எவரும் உணவுகளை ஜொமேட்டோவில் ஆர்டர் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளனர். பின்னர் போராட்டத்தில் ஜொமேட்டோவில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் அணிந்திருந்த டி-சர்ட்டை தீ வைத்து எரித்துள்ளார்.

ஜொமேட்டோவில் சீனா நிறுவனம் அதிக முதலீடுகள் செய்து உள்ளது தான் இதற்கு காரணம். சீனா நாட்டின் முன்னணி நிறுவனமான அலிபாபா ஜொமேட்டோ நிறுவனத்தின் 14.7 பங்குகளை 210 மில்லியன் டாலருக்கு சென்ற 2018ஆம் ஆண்டு வாங்கியுள்ளது

இந்தியாவில் சீனா நாட்டின் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதித்து வருகிறது என பல கருத்துக்கள் வெளிவருகிறது. ஆனால், சில நாட்களாக சீனா நாட்டின் தயாரிப்புகளுக்கும் மற்றும் பொருட்களுக்கும் எதிராக இந்தியாவில் பல மாநிலங்களில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.    

Similar News