தி.மு.க-வுக்காக ஆட்களை விரட்டிப்பிடிக்கும் பீகாரி பி.கே.பாண்டேயின் ஐ-பேக், பதறியடித்து ஓடும் நெட்டிசன்கள்! #IPAC

தி.மு.க-வுக்காக ஆட்களை விரட்டிப்பிடிக்கும் பீகாரி பி.கே.பாண்டேயின் ஐ-பேக், பதறியடித்து ஓடும் நெட்டிசன்கள்! #IPAC

Update: 2020-06-29 07:32 GMT

ஒரு காலத்தில் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் வீதி, வீதியாக சென்று மாணவர்கள் உள்ள வீடுகளில் பேசி பள்ளிகளில் சேர்த்தார்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாளர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்ய ஆட்களை சேர்த்தார்கள். இன்றும் சில கட்சிகளில் பொதுக்கூட்டத்திற்க்கு வண்டியில சாப்பாடு, மதுபானம் என வாங்கி குடுத்து ஆட்களை கொத்து கொத்தாக பிடித்துக்கொண்டு சொல்வதை கிராமங்களில் பார்க்க முடியும் அந்த வகையில் சமீபத்தில் திமுக'விற்காக ஐ-பேக் நிறுவனம் நெட்டிசன்களை வலை போட்டு பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் ஒரு தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில், ஐ-பேக் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒரு தனிநபரிடம் இது தொடர்பாக பேசும் உரையாடல்.

ஐ-பேக் ஊழியர் - "வணக்கம் சார் நாங்க ஐபேக் கம்பெனியிலிருந்து கால் பன்றோம்!"

தனிநபர் - "சொல்லுங்க மேடம்"

ஐ-பேக் - "சார் நாங்க இரண்டு மாத தற்காலிக பணி ஒன்னு ஆஃபர் பன்றோம், இது பாத்தீங்கன்னா நாங்க செய்தி குடுத்துடுவோம் நீங்க அதை வெளியிடனும், உங்களுக்கு தமிழ் டைப்பிங் தெரியுமா சார்?"

நபர் - "இல்லை மேடம் அவ்ளோவா தெரியாது"

ஐ-பேக் - "உங்ககிட்ட லேப்டாப் இருக்கா சார்?"

நபர் - 'இருக்கு மேடம்!"

ஐ-பேக் - "ஓகே சார் ஒரு சின்ன இண்டர்வியூ இருக்கும், நீங்க வீட்லேயே இருந்து பண்ணா போதும். மாசம் ரூ.12,000 சம்பளம், நாங்க அதுக்கான லிங்க் அனுப்புவோம்..!!" என தொடர்ந்து கோண்டே செல்கிறார் அந்த பெண் ஊழியர்.

தனிநபர் - "மேடம் இது DMK'க்காகவா?" என ஒரே கேள்வி கேட்க பதிலுக்கு ஐ-பேக் ஊழியரும் ஆமாம் என்கிறார் பதறிபோன தனிநபர் "இல்லை மேடம் விருப்பம் இல்லை" என தொடர்பை துண்டித்து விடுகிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் இந்த உரையாடல் சிலரிடம் விசாரித்த போது.

மதுரையில் உள்ள ஒருவர், "ஆமாம் நண்பா எனக்கும் வந்துச்சு ஆனா நா இண்ட்ரஸ்ட் காமிக்கலை என்றார்". வேலூர் ராணிப்பேட்டையில் ஒருவர் கூறும் போது, "ஆமாம் சார் கால் வந்துச்சு நானும் ஆரம்பத்துல மாசம் ₹12,000 வருமேன்னு ஓக்கே சொல்லலாம்ன்னு பாத்தேன், ஆனா அப்புறம்தான் யோசிச்சேன் 'இது அரசியல் சம்மந்தபட்டது, நாம ஏதாவது அவங்க சொல்றதை போட அது பொய்ன்னு நாலு பேர் வந்து கேள்வி கேட்பான் அப்புறம் பதில் தெரியாம முழிக்கனும்! இதுல இன்னும் ரெண்டு பேர் வந்து கேவலமா திட்டுவான். ₹12,000 காசுக்கு ஆசைப்பட்டு கேவலமா திட்டு வாங்க நம்மாள முடியாதுப்பான்னு" நினைச்சுட்டே வேண்டாம்'ன்னு சொல்லிட்டேன் என்று முடித்துக்கொண்டார்.

மேடையில் வசீகரமாக எதுகை மோனையில் பேசி, போராட்டத்தில் தண்டவாளத்தில் தலையை வைத்து போராடி வளர்த்த கட்சி இன்று குடும்ப கட்டுப்பாடு செய்ய ஆள் பிடிப்பது போல் தன் தி.மு.க-வின் புகழை பரப்ப ஆள் பிடித்து கொண்டு திரிவது வேதனையளிக்கிறது. இதற்கு தி.மு.க தலைமை என்ன பதில் தர போகிறது???

Similar News