ஆம்புலன்ஸுக்காக காத்திருந்த கொரோனா நோயாளி உயிரிழப்பு - கர்நாடகாவில் பரபரப்பு!

ஆம்புலன்ஸுக்காக காத்திருந்த கொரோனா நோயாளி உயிரிழப்பு - கர்நாடகாவில் பரபரப்பு!

Update: 2020-07-04 14:50 GMT

கர்நாடகாவில் உள்ள பெங்களுருவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர் ஆம்புலன்ஸ் தக்க நேரத்தில் வராததால் நடுரோட்டிலே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெங்களுரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும் ஹனுமந்தா நகரில் வசித்து வந்த 65 வயது பெரியவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவருடைய வீட்டின் முன்பு ஆம்புலன்ஸுக்காக காத்து இருந்தால் அக்கம் பக்கத்தினர் பயப்படுவார்கள் என்பதால் தெரு முனையில் ஆம்புலன்ஸை வர சொல்லி தகவல் தெரிவித்துள்ளார். நான்கு மணிக்கு வரவேண்டிய ஆம்புலன்ஸ் ஏழு மணி ஆகியும் வரவில்லை. மூன்று மணி நேரத்துக்கு பின்பு ஆம்புலன்ஸ் வந்துள்ளது.

ஆனால், அதற்கு முன்பே அந்த பெரியவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நடு ரோட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News