நடிகர் திலகம் சிவாஜியின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் - புகழஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்.!

நடிகர் திலகம் சிவாஜியின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் - புகழஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்.!

Update: 2020-07-21 10:52 GMT

ராஜ ராஜ சோழன், நாரதர்,கர்ணன், கட்டபொம்மன், சிவன், வீரபாகு, கொடிகாத்த குமரன், பகத் சிங் ஆகிய பல நூறு படங்களில் நடித்து வெற்றி வாகை சூடியவர். கம்பீரமாக காட்சியளிக்கும் இவர் எண்ணற்ற படங்களில் நடித்து திரைத்துறைக்கு பெருமை சேர்த்தவர். இன்று இவர் மண்ணைவிட்டு மறைந்த நாள். இவர் போல் இதுவரை எந்த நாயகனாக நடிக்க முடியவில்லை. இவர் குணச்சித்திர கதாபாத்திரம் மக்களிடையே பெரிதும் கவர்ந்திருந்தது.அந்த உயர்ந்த உள்ளத்தை தெய்வ மகனை நினைக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது.

இவர் 1928ம் ஆண்டு அக்டோபர்1ம் தேதி பிறந்த கணேசன், சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் எனும் மேடை நாடகத்தில் சத்ரபதி சிவாஜியின் மறு அவதாரமாக நடித்து அசத்தியதில் இருந்து சிவாஜி கணேசனாக மாறினார். இவர் கடந்த 2001ம் ஆண்டு உடல்நலக்குறைவால் ஜூன் 21ஆம் தேதி மறைந்தார்.இன்று அவரது 19வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று அவருடைய 19ம் ஆண்டு நினைவு தினத்தில் திரையுலகினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்றும் மக்களின் மனதில் என்றும் நினைத்திருப்பார் ஆக இருப்பார் என பலரும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Similar News