டெல்லியில் ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மருத்துவமனையில் 20 வார்டுகளுக்கும் வீர மரணம் அடைந்த கல்வான் வீரர்கள் பெயர் - அமித்ஷா,ராஜ்நாத் சிங் சூட்டினர்.!

டெல்லியில் ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மருத்துவமனையில் 20 வார்டுகளுக்கும் வீர மரணம் அடைந்த கல்வான் வீரர்கள் பெயர் - அமித்ஷா,ராஜ்நாத் சிங் சூட்டினர்.!

Update: 2020-07-06 12:23 GMT


கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் சில வாரங்களுக்கு முன்பாக மந்த நிலையில் இருந்தன. அதற்கு காரணம் படுக்கை வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அதனால் டெல்லியை சேர்ந்தவர்களுக்குத்தான் படுக்கைகள் முன்னுரிமை என்றார் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா இந்த பிரச்சினையில் நேரில் தலையிட்டு அனைத்து முக்கிய மருத்துவ மனைகளையும் நேரில் பார்வையிட்டார். அடுத்து அனைத்து பணிகளும் வேகப்பட்டன. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரமாண்ட மருத்துவமனையை DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ளது.

250 ஐசியூ படுக்கை வசதிகள் உள்ளிட்ட பத்தாயிரம் படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை 12 நாட்களில் தயாராகியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு முழுமையாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்துக்கு அருகே உள்ள விமானப்படைக்கு சொந்தமான இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, ஆயுதப்படையினருக்கான மருத்துவப் பிரிவால் இயக்கப்பட உள்ளது.

இந்த மருத்துவமனை முழுவதுமாக குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு சர்தார் வல்லபாய் படேல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐசியூ மற்றும் வெண்டிலேட்டர் வார்டுக்கு கல்வான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதேபோல் கல்வானில் உயிரிழந்த தமிழக வீரர் பழனி உள்ளிட்ட 20 வீரர்களின் பெயர்களும், ஒவ்வொரு வார்டுக்கும் சூட்டப்பட்டுள்ளன. இங்கு கொரோனா சிகிச்சை முழுமையாக இலவசமாக வழங்கப்படும் என DRDO தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 600 பேர் பணியில் ஈடுபட உள்ளதாகவும், வரும் நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து இது மாறுபடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மருத்துவமனையை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் DRDO தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News