இந்திய கடற்படையில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, எப்படி நடந்தது?

இந்திய கடற்படையில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, எப்படி நடந்தது?

Update: 2020-04-18 04:17 GMT

இந்தியாவில் தற்போது வரை 13,835 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், 452 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய கடற்படை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இராணுவத்தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே, கொரோனா வைரஸிற்கு இராணுவத்தில் இரண்டு டாக்டர்கள் உட்பட 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது  கடற்படை வீரர்கள் 20 பேருக்கு  நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு மும்பை கொலாபாவில் உள்ள ஐ.என்.எச்.எஸ் அஸ்வினி கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடற்படையினர் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கடற்படைத் தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News