இறைச்சி, தோலுக்காக பசுக்களை கடத்தும் கும்பலை பிடிக்க ஒரு கிராமமே சுற்றிவளைப்பு - 21 பேர் கைது, 2,572 மாட்டு தோல்கள் மீட்பு.!

இறைச்சி, தோலுக்காக பசுக்களை கடத்தும் கும்பலை பிடிக்க ஒரு கிராமமே சுற்றிவளைப்பு - 21 பேர் கைது, 2,572 மாட்டு தோல்கள் மீட்பு.!

Update: 2020-06-16 03:26 GMT

ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் பரவலாக நடக்கும் பசு மாடுகள் கடத்தலைத் தடுப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். அப்போது ஜமல்கர் கிராமத்தில் வீடு வீடாக சென்று சோதனை நடத்தியதில் இருந்து வீடுகள் மற்றும் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,572 மாட்டு தோல்களை போலீசார் மீட்டனர். மேலும் மாடுகள் கடத்தல் மற்றும் மாட்டுத் தோல்கள் கடத்தலுக்காக பயன்படும் டாடா 407 வாகனத்தையும் கைப்பற்றினர்.

கிராமத்துக்குள் நுழைந்து முன்னதாக தேடுதல் வேட்டை நடத்தும் முன்பாக கிராமத்தில் இருந்து யாரும் வெளியேறாத வகையில் பார்த்துக் கொண்டதாகவும் போலீசார் கூறினர். கிராமத்தில் ஜூன் 10 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறைச்சிக்காக பசு மாடுகளை கடத்துதல், தோல்கள் கடத்தல், மாடுகள் திருட்டு போன்ற புகார்கள் தொடர்பாக இப்பகுதியை சேர்ந்த நின்னா, நிஜாம், சலாமு, டினு, அகமது உசேன், பாபுடின், அசார், இலியாஸ், மம்மன், நிவாசியன், நின்னா, நிஜாம், ஃபாரூக், ஹசிம், தினு, அல்லி, ஆசிப், நிஜாம், முஸ்தாக்கிம், நியாசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

சென்ற ஜூலை 2019 இல், பசு கடத்தலை எதிர்த்ததற்காக கோபால் என்ற இளைஞன் கொல்லப்பட்டான். இதேபோல், ஹரியானா மற்றும் உ.பி.யில் கால்நடை கடத்தல்காரர்களால் பல வன்முறை தாக்குதல்கள் நடந்துள்ளன. கால்நடை கடத்தல்காரர்கள் போலீஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கூட அறியப்படுகிறது. ஹரியானாவின் மேவாட் பகுதி கால்நடை கடத்தல் மற்றும் சட்டவிரோத படுகொலைகளின் மையமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News