கொரோனாவில் இருந்து பாதுகாக்க 25,000 பேர் பங்களாதேஷில் ஒன்றுக்கூடி தொழுகை!

கொரோனாவில் இருந்து பாதுகாக்க 25,000 பேர் பங்களாதேஷில் ஒன்றுக்கூடி தொழுகை!

Update: 2020-04-08 11:08 GMT

பங்களாதேஷ் நாட்டில் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள 25,000 முஸ்லிம்கள் இணைந்து தொழுகை நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் தெற்கு பகுதியில் உள்ள லக்ஷ்மிபூரின் ராய்ப்பூர் நகரின் கடந்த மார்ச் மாதம் 18-ஆம் தேதி மாலை நேரத்தில் சிட்டகாங் நகர அந்தர்கில்லா ஷாஹி ஜேம் மசூதியின் மௌலானா செய்யது முஹம்மது அன்வர் ஹூசைன் வழிநடத்த கத்மீ ஷிஃபா என்றும் அயட் அஷ் ஷிஃபா என்றும் அழைக்கின்ற குரானில் குணப்படுத்தும் 6 வசனங்களை கதீப் என்னும் தொழுகை மூலம் சீன வைரஸ் கிருமியான (கொரோனா) தீநுண்மியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டி 25,000 பேர் கூடி உள்ளனர். அந்நாட்டின் காவல்துறையை பொறுத்தவரை முன் அனுமதியின்றி கூடிய கூட்டமாக தெரிவித்து உள்ளது.

நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைத்து நாடுகளிலும் கூட்டம் கூடாமல் தனித்து இருக்கும் போது நோய் தொற்று பரவ வசதியாக 25,000 பேர் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நோய் தொற்று பாதிப்புடன் 164 பேருடன் 17 இறப்புகளை அந்நாடு சந்தித்து உள்ளது.

Similar News