கொரோனா தடுப்பு பணிக்கு ரூ 25000 நிதி அளித்த விவசாயி எங்கே, மக்கள் பணத்தில் வாழ்ந்தும் உதவாத சிலர் எங்கே.!

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ 25000 நிதி அளித்த விவசாயி எங்கே, மக்கள் பணத்தில் வாழ்ந்தும் உதவாத சிலர் எங்கே.!

Update: 2020-04-20 11:33 GMT

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி அவர்களிடம் ரூ.25000த்திற்கான காசோலையை விவசாயி அளித்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகின்றது. இதற்காக தமிழக முதலமைச்சர் தங்களால் முயன்ற பண உதவிகளை செய்யும்படி தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ளது கரகூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஐ.சுப்ரமணி ஆவார்.

முதலமைச்சரின் வேண்டுகோளின்படி ரூ.25000த்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சரும் தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி அவர்களிடம் அளித்தார்.

விவசாயி அவர்களின் சேவையை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பாராட்டினார்கள். 

Similar News