6000 ரயில் நிலையங்களில் Wi-Fi வசதி - குறுகிய காலகட்டத்தில் நிறைவேற்றிய இந்தியா!

Update: 2021-06-08 06:57 GMT

இந்தியாவில் தற்போது 102 ரயில் நிலையங்களை தவிர மற்ற 6000 ரயில் நிலையங்கள் Wi-Fi வசதி கொண்ட ரயில் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு இடையிலான டிஜிட்டல் வசதிக் குறைபாடுகளை போக்கும் விதமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் Wi-Fi வசதி செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலமாக தற்போது இந்தியாவில் மொத்தம் 6001 ரயில் நிலையங்களில் Wi-Fi வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலமாக கிராம பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களிலும் டிஜிட்டல் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் தற்போது இந்தியாவில் மொத்தம் 6001 ரயில் நிலையங்களில் Wi-Fi வசதி பொருத்தப்பட்டு உள்ளதாகவும் ஏனைய 102 ரயில் நிலையங்களிலும் விரைவில் இந்த வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு டிஜிட்டல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காகவே ரயில்வே தொடர்ந்து தொலைதூர நிலையங்களில் Wi-Fi வசதியை விரிவுபடுத்தி வருகிறது என்று ரயில்வே அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு வருகின்றன. எனவே கிராமப்புறம் மக்களுக்கும் மற்றும் ரயில் பயணிகளுக்கும் இலவசமாக Wi-Fi வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ரயில் நிலையங்களில் இந்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள பகுதிகளில் Wi-Fi பொருத்தப்பட்டவுடன் இந்தியா முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் Wi-Fi வசதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News