இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம்.!

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம்.!

Update: 2020-07-07 12:52 GMT

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 4,39,947 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,80,390 ஆக உள்ளது. இதனால் கொரோனாவில் குணம் அடைபவர்கள் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் 1,115 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளது. அதில் பரிசோதனை எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Similar News